சைக்கிள் பந்தயத்தில் இந்தியாவுக்கு 6 பதக்கம்

சைக்கிள் பந்தயத்தில் இந்தியாவுக்கு 6 பதக்கம்

ஆசிய கோப்பை சைக்கிள் பந்தயம் டெல்லியில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்தது. இதில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கும். மகளிர் பிரிவில் 500 மீட்டதில் டிபோரா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 35.964 விநாடிகளில் கடந்தார். இந்த பிரிவில் மலேசியா வெள்ளிப் பதக்கமும், ஹாங் காங் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியது. எலைட் அணிகள் பிரிவில் டிபோரா, கெஜியா வர்கீஸ் ஆகியோரை கொண்ட இந்திய அணி, கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணியினர் 35.962 விநாடிகளில் இலக்கை அடைந்தனர். மகளிருக்கான 3 கிலோ மீட்டர் பிரிவில் இந்தியாவின் ராஜ்குமாரி தேவி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான எலைட் அணி பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது. இந்திய அணி பந்தய தூரத்தை 46.330 விநாடிகளில் கடந்தது. இந்த பிரிவில் மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கமும், கஜகஸ்தானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது. ஜூனியர் ஸ்பிரின்ட் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக் கத்தை கைப்பற்றியது. இதே பிரிவில் இந்திய மகளிர் அணியும் வெள்ளி வென்று அசத்தியது. முதல் நாள் முடிவில் இந்தியா, மலேசியா அணிகள் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. இரு அணிகளும் தலா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றன.

Comments