8 செயற்கைக்கோள்களுடன் செப். 26-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்

8 செயற்கைக்கோள்களுடன் செப். 26-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 26-ம் தேதி 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து செப்டம்பர் 26-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் ஏவப்படுகிறது. அதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெ ரிக்கா ஆகிய நாடுகள் தயாரித்துள்ள 5 செயற்கைக்கோள்கள், மும்பை ஐஐடி உரு வாக்கியுள்ள 'பிரதம்', பெங்களூர் பிஇஎஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள 'பிசாட்' ஆகிய செயற்கைக்கோள்கள் என மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் 'ஸ்காட்சாட்-1' செயற்கைக்கோளுடன் இணைத்து அனுப்பப்படுகின்றன. 8 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 675 கிலோ ஆகும். இதில் ஸ்காட்சாட் செயற்கைக்கோள் துருவ சூரிய ஒத்தியங்கு சுற்றுப் பாதையிலும், மற்ற செயற்கை கோள்கள் துருவ வட்டப் பாதையிலும் நிலை நிறுத்தப்படுகின்றன.

முதல் முறை

இந்திய ராக்கெட் ஒன்று இரு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் இந்த பயணம் முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலில் முதன்மை செயற்கைக்கோளான 'ஸ்காட்சாட்-1'-ஐ திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின் என்ஜின் சிறிது நேரம் நிறுத் தப்பட்டு, பின்னர் மீண்டும் இயங்கப்பட்டு மற்றொரு சுற்றுவட்டப் பாதையில் மீதமுள்ள செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த உள்ளது.

இரு சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்க வேண்டியிருப்பதால் ராக்கெட் டின் மொத்த பயண நேரம் 2.15 மணி நேரமாக இருக்கும். பொதுவாக மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்களின் பயண நேரம் 20 நிமிடம் மட்டுமே ஆகும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்திய ராக்கெட் ஒன்று இரு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் இந்த பயணம் முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Comments