இந்திய-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் உருவான ‘பராக் - 8’ ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் உருவான 'பராக் - 8' ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லிய மாக தாக்கும் திறன் படைத்த இந்தியாவின் 'பராக் - 8' ஏவு கணை சோதனை நேற்று வெற்றி கரமாக சோதிக்கப்பட்டது.

இந்தியா, இஸ்ரேல் கூட்டு முயற்சியில் மேம்படுத்தப்பட்ட 'பராக் 8' ஏவுகணை ஒடிசாவின் சாண்டிப்பூரில் உள்ள ஒருங் கிணைந்த சோதனை மையத்தில் இருந்து காலை 10.13 மணி யளவில் சோதித்துப் பார்க்கப் பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரி வித்தனர்.

இந்த ஏவுகணையின் வெள் ளோட்டச் சோதனை வெற்றிகர மாக முடிந்ததை அடுத்து, விரைவில் கூடுதலாக பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து டிஆர்டிஓ அதிகாரி கூறும்போது, ''ஏவு கணையுடன் அதில் பொருத்தப் பட்ட பன்முக கண்காணிப்பு இயக்கம் மற்றும் அச்சுறுத்தலை உஷார்படுத்தும் ரேடார் (எம்எஃப் ஸ்டார்) முறைகளும் சோதித்துப் பார்க்கப்பட்டது. அதன் செயல்பாடும் திருப்திகரமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் விண்ணில் உள்ள எந்தவொரு இலக்குகளையும் ஏவுகணையால் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்'' என்றார்.

வான்வழியாக வரும் எந்த வொரு அச்சுறுத்தலையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களைச் சுமந்தபடி 70 கி.மீ முதல் 90 கி.மீ சுற்றளவில் உள்ள இலக்குகளை எளிதாக தாக்கும் வல்லமை படைத்தது. குறிப்பாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் ஆகியவற்றையும் இடைமறித்து அழிக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணை 2.7 டன் எடையில், 4.5 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியா, இஸ்ரேல் கூட்டுறவுடன் கடந்த ஜூன், 30 மற்றும் ஜூலை 1-ம் தேதியில் தரையில் இருந்து விண்ணில் பாயும் நடுத்தர ரக ஏவுகணை சோதித்துப் பார்க்கப் பட்டது.

 

Comments