ஆசிரியர் படிப்பில் போலி மாணவர்கள்

ஆசிரியர் படிப்பில் போலி மாணவர்கள்

அரசிடம் இருந்து, கல்வி உதவி தொகை பெற, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், போலி மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் பயிற்சி பள்ளி அதிகாரிகள் கூறியதாவது: அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், டிப்ளமோ ஆசிரியர் படிப்பு உள்ளது. இதில், சேருவதற்கான கல்வித் தகுதி, பிளஸ் 2 தேர்ச்சி. ஆனால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், தற்போது மாணவர்கள் குறைவாகவே சேர்கின்றனர். அதனால், கல்லுாரியில் சேராத, அதேநேரத்தில், பிளஸ் 2 முடித்தவர்களின் சான்றிதழ் களைக்காட்டி, பயிற்சியில் சேர்ந்ததாக, போலி கணக்கு காட்டுகின்றனர். குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினமாணவர்களுக்கு, அரசின் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது. இந்த கட்டணத்தை, போலி மாணவர்கள் பெயரில் பெற்று, பல பள்ளிகள் பலன் அடைவதாக, புகார் வந்துள்ளது. போலி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது; விரைவில், விசாரணை துவங்க உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment