SCROL

Friday, September 30, 2016

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க கர்நாடகா மறுப்பு இரு மாநில பிரதிநிதிகள் டெல்லியில் இன்று பேச்சு

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க கர்நாடகா மறுப்பு இரு மாநில பிரதிநிதிகள் டெல்லியில் இன்று பேச்சு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 6,000 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாட காவுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சி களும், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக் கப்பட்டுள்ளது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து விவாதிப் பதற்காக முதல்வர் சித்தராமையா அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கவுடா, ரமேஷ் ஜிகஜினகி, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, மஜத மாநில தலைவர் குமாரசாமி உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.இதையடுத்து மத்திய அமைச் சர்களும், பாஜக தலைவர்களும், ''உச்ச நீதிமன்றம் கர்நாடகாவின் குடிநீர் தேவையை புரிந்து கொள் ளாமல் காவிரி நீரைத் திறக்க உத்தரவிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. எக்காரணம் கொண்டும் தமிழகத் துக்கு காவிரி நீரைத் திறந்து விடக்கூடாது. இதனால் சித் தராமையா ஆட்சியை இழந்து, சிறைக்கு சென்றால் நாங்களும் சிறைக்கு செல்ல தயாராக இருக் கிறோம்'' என வலியுறுத்தினர். இதே கருத்தை மஜத, காங்கிரஸ் தலைவர்களும் வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து சித்தரா மையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடந்த‌து.

பழைய‌ முடிவே தொடரும்

அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'காவிரி நீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்'' என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றினோம். பாசனத்தைவிட, குடிநீருக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சட்டம் வலியுறுத்தியபோதும், உச்ச நீதி மன்றம் எங்களது தீர்மானத்தைப் பொருட்படுத்தவில்லை.அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர் களும், உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தினர். இதே கருத்தை முன்மொழிந்த அமைச்சர்கள், வியாழக்கிழமை டெல்லியில் நடைபெறும் இரு மாநில முதல் வர்களின் கூட்டத்துக்கு பிறகு முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். எனவே கர்நா டக அரசின் பழைய முடிவையே (தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க முடியாது), வியாழக்கி ழமை மாலை வரை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.ம‌த்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி தமிழகம்- கர்நாடகா ஆகிய இரு மாநிலங் களை சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்கள், அதி காரிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். வியாழக்கிழமை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவின் சார்பாக நானும் (சித்தராமையா), நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலர் உள்ளிட்டோ ரும் பங்கேற்கிறோம். இந்தக் கூட் டத்தில் கர்நாடகாவில் நிலவும் வறட்சியை எடுத்துக்கூறி, குடிநீர்த் தேவையை உறுதி செய்வோம். கிருஷ்ணராஜ சாகர் அணையில் தற்போதுள்ள குறைந்த நீரைக் கொண்டே, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரையிலான பெங்களூரு, மைசூரு, மண்டியா வின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த இக்கட் டான சூழ்நிலையின் காரண மாகவே தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க முடியவில்லை. இதனால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கி றது என பொருள் கொள்ளக் கூடாது'' என்றார்.

முதல்வர்கள் கூட்டம்

உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வளத் துறை அமைச் சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் உள்ள ஷ்ராம் சக்தி பவனில் இன்று காலை 11.30 மணிக்கு இரு மாநில முதல்வர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத் தில் தமிழக முதல்வர் ஜெயல லிதா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார். அவர் முதல்வர் ஜெ யலலிதாவின் காவிரி தொடர்பான உரையை வாசிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று டெல்லியில் நடக்கும் காவிரி நீர் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க, தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அதிகாரிகள் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment