SCROL

Wednesday, September 28, 2016

குப்பையில் இருந்து தங்கம்!

குப்பையில் இருந்து தங்கம்!

குப்பையில் வீசப்படும் பழைய மின்னணுச் சாதனங்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறையை எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.செல்போன், டி.வி. உள்ளிட்ட மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பில் ஆண்டுதோறும் டன் கணக்கிலான தங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை குப்பைகளாக வீசப்படும்போது இவற்றில் உள்ள தங்கம் பிரித்தெடுக்கப் படுவதில்லை. இதில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவே தங்கத்தைப் பிரித்தெடுப்பது சாத்தியமில்லை என்று கூறப்பட்டு வந்தது.இந்நிலையில்தான், பழைய மின்னணுச் சாதனங்களில் இருந்து தங்கத்தை எளிதாகப் பிரித்தெடுக்கும் முறையை எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதன்மூலம் உலகின் தங்க தேவையைச் சமாளிக்கலாம் என்று கூறும் அவர்கள், தங்கம் தோண்டியெடுக்கும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் வெகுவாகக் குறைக்கலாம் என்கின்றனர்.

No comments:

Post a Comment