ஜீப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய, சக்திவாய்ந்த டவர் ஸ்பீக்கர் “மேஜர்”

ஜீப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது புதிய, சக்திவாய்ந்த டவர் ஸ்பீக்கர் "மேஜர்"

மைக், ப்ளூடூத் இணைப்பு மற்றும் USB/SD ஸ்லாட்டுகள் போன்ற சிறப்பம்சங்கள் கொண்டது. ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், தகவல் தொழில் நுட்ப துபைபொருட்கள், ஒலி/ஒளி மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி பிராண்டு ஆகும். இந்நிறுவனம், இப்போது 'மேஜர்' என்ற பெயரில் புதிய டவர் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒலி சக்கரவர்த்தி டவர் ஸ்பீக்கர்கள், குறைந்த ஒலி விலகல் கொண்ட சிறப்பாக செயல்படும் ஒலி சாதனத்திற்காக ஏங்கும் இளவயது ஒலி விரும்பிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டது ஆகும். அழகாக வடிவமைக்கப்பட்ட மர அலமாரியின் உள்ளே இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் பளபளப்பான முன்புறத்துடன் மிகவும் கவர்ச்சிகரமாக திகழ்கிறது. ஒவ்வொரு டவர் ஸ்பீக்கரும், குறைந்த அலைவரிசை ஒலிகளை வழங்கும் 16 செ.மீ ஒலிபெருக்கியை கொண்டுள்ளது. கிடைக்கும் இலையசைவுகளின் சத்தம் மற்றும் ஜன்னல் அசையும் சண்டைக் காட்சிகள் ஆகியவை அறை முழுக்க நிரம்பி, ஒலி விரும்பிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க்குகிறது. இந்த இரட்டை டவர்கள், அதிக அலைவரிசைகளை துல்லியமாக அளிக்கும் நாங்கு 7.6 செ.மீ ஸ்பீக்கர் டிரைவர்களின் சக்தியால் இயங்குகிறது. இந்த ஸ்பீக்கர்கள் ஸ்டீரியோ இசைக்கு மிக சிறப்பானவை ஆகும். 70 வாட்டுகள் RMS ஒலி அளவுடன், நீங்கள் சத்தத்தின் முழு வீச்சையும் உணர முடியும். இதனால் உங்களுக்கு வீட்டிலேயே அற்புதமான ஒலியுடன் கூடிய கச்சேரி போன்ற அனுபவத்தை பெற முடியும். சரியான அளவு பாஸ் மற்றும் உச்சஸ்தாயில் மேம்பட்ட ஒலி ஆகியவற்றுடன் விருந்து பிரியர்கள் தங்கள் சாதாரண அறையை விரைவில் விருந்து கூடமாக மாற்றிவிடலாம். விருந்து கொண்டாட்டத்தை மேலும் உற்சாகமளிக்க, கரோக்கி வசதிக்கு ஏற்ற வயர்கள் அற்ற மைக்குடன் வருகிறது.  இந்த வசதியை, உங்களுக்கு விருப்பமான இசை இந்த ஆற்றல் மிக்க இடி முழுங்கும் ஸ்பீக்கர்களில் ஒலிக்க, அதை உங்கள் மனசாரப் பாடி மகிழப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த ஸ்பீக்கர்கள் அளிக்கும் இணைப்பு வசதிகள், இந்த ஒலி அமைப்பை இசைப் பிரியர்களுக்கு பிடித்தமானதாக செய்கிறது. வயர்களற்ற இசைக்கு இந்த ஸ்பீக்கர்களின் உட்புறத்திலேயே ப்ளூடூத் இருக்கிறது. மேலும், தொலைக்காட்சி, DVD ப்ளேயர், கம்ப்யூட்டர் போன்றவற்றை இந்த ஸ்பீக்கர்களுடன் இணைக்க ஏதுவாக AUX அம்சம் இருக்கிறது. இதில் FM வானொலி கேட்க விரும்புவர்களுக்காக, FM வானொலியும் இருக்கிறது. பல வகையான சாதங்களில் இருந்து இசையை ஒலிக்க விரும்புவர்களுக்காக, இதில் இருக்கும் USB/SD கார்டு ரீடர் ஸ்லாட் உதவுகிறது. மேஜர் டவர் ஸ்பீக்கர்கள் இப்போது முன்னணி கடைகள் மற்றும் ஆன்லைன் கடைகளில் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸின் ஒரு வருட உத்திரவாதத்துடன்வருகிறது. இதன் விலை ரூபாய் 8787/-.

 ஜீப்ரானிக்ஸ் பற்றி

1997ல் தொடங்கப்பட்ட, சென்னையை தலைமையகமாகக் கொண்ட ஜீப்ரானிக்ஸ் தன் துறையில் மிக அதிகமான பொருட்களின் அணிவரிசையை கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் துணை பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள் என மொத்தம் 25 பொருள் வகைகள் மற்றும் 350க்கும் மேற்பட்ட SKUகள். ஜீப்ரானிக்ஸின் தயாரிப்புகள் சேசிஸ்/காபினெட்டுகள், ஸ்பீக்கர்கள், டேப்லட் pc, PC பவர் சப்ளை, போர்ட்டபிள் மீடியா ப்ளேயர்கள், ஹெட்போன், கீபோர்டு & மவுஸ், LED மானிட்டர்கள், UPS, கேமிங் ஆக்ஸஸரிஸ்,  TV ட்யூனர்கள், ஆட்-ஆன் கார்டுகள், கம்ப்யூட்டர் துணை பொருட்கள், லேப்டாப் துணை பொருட்கள், LED  டெலிவிஷன்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவை ஆகும். ஜீப்ரானிக்ஸ் இதுவரை துறை சார்ந்த விருதுகள் 48 வென்றுள்ளது. ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு 31 கிளை அலுவலகங்கள் மற்றும் அனைத்து பெரு நகரங்கள் உட்பட 126 சேவை மையங்களும் உள்ளன. ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தில் 900  ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 12,000 சானல் பார்ட்னர்கள் நெட்வொர்க்கின் மூலம் இயங்குகிறது

Comments