கோடிக்கணக்கான வண்ணங்களில் எழுதும் எலக்ட்ரானிக் பேனா

கோடிக்கணக்கான வண்ணங்களில் எழுதும் எலக்ட்ரானிக் பேனா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயங்கும் கிரான்சி இங்க் நிறுவனம், 16 மில்லியன் வண்ணங்களில் எழுதும் எலக்ட்ரானிக் பேனாவை உருவாக்கி உள்ளது. இந்த பேனாவின் பெயர் 'ஸ்கிரிப்பிள்'.ஆச்சரியமாக இருந்தாலும், நம்பித்தான் ஆக வேண்டும். இந்த பேனாவில் மை நிரப்பப்படுவதில்லை. எந்த விதமான வண்ணம் தேவையோ அந்த வண்ணம் உடைய பொருட்கள், இடத்தை இந்த பேனாவால் தொட்டால் போதும். இதிலுள்ள சென்சார்கள் அந்த வண்ணத்தை அப்படியே 'காப்பியடித்து' தனக்குள் அதே நிறத்தை தயாரித்து எழுதத் தொடங்கிவிடும். இதற்காக 5 முதன்மை வண்ணங்களைக் கொண்ட குட்டி வண்ண தொழிற்சாலை பேனாவுக்குள் செயல்படுகிறது. மேலும் இந்த பேனாவுக்கான அப்ளிகேசனை நிறுவிக் கொண்டால், எழுதும் தகவல்கள் மற்றும் வரையும் படங்கள் அப்படியே நேரடியாக கணினி, செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும். கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம் இந்த பேனாவை தயாரித்து வழங்க உள்ளது. பல தரங்களில் 2 டாலர் முதல் 139 டாலர் வரை பலவிலைகளில் இந்த பேனா விற்பனைக்கு வருகிறது.

No comments:

Post a Comment