வங்கியில் அதிகாரி பணி

வங்கியில் அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா. தற்போது இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ரத்திலான கிரெடிட் ஆபீசர், மற்றும் ரிஸ்க் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கிரெடிட் ஆபீசர் பணிக்கு 38 இடங்களும், ரிஸ்க் மேனேஜர் பணிக்கு 23 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 30-9-2016 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மாற்றுத்தினாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். எம்.பி.ஏ. (நிதி), முதுகலை படிப்புடன் நிதி சார்ந்த டிப்ளமோ படிப்பு மற்றும் சி.ஏ. படித்தவர்கள் கிரெடிட் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பி.டெக்/எம்.சி.ஏ., எம்.பி.ஏ.(நிதி), எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. புள்ளியியல், படித்தவர்கள் ரிஸ்க் மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50ம், மற்றவர்கள் ரூ.550ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-9-2016-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 4-11-2016-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Comments