உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆராய்ச்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முடிவு

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆராய்ச்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முடிவு

மனிதர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்கள், தேவைக்கு ஏற்றாற் போல் தற்போது உணவு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இருக்கும் உணவு வகைகள் நமது உணவு கலாச்சாரமே கிடையாது. மாறிவரும் இந்த உணவு பழக்க வழக்கத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் குறைபாடுகள் அதிகரித்துள்ளன. உடல் பருமன் அதிகரிப்பு, நீரிழிவு, இதயம் சம்பந்த மான நோய்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. பட்டை தீட் டப்பட்ட (பாலீஷ்) தானியங்கள் மற்றும் மாவு வகைகள், அதிகரித்து வரும் துரித உணவுகள் போன்ற காரணங்களே இன்றைய நோய் களுக்கு அடிப்படையாகிவிட்டன. பொருளாதாரத்தில் இந்தியா சிறந்து விளங்கினாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடுசெய்வதில் பெரும் சவால் தொடர்கிறது. இந்தியாவில் நீரிழிவு நோயாளி களில் சராசரியாக 20 சதவீதம் பேருக்கு அரிசியை மட்டுமே உட் கொள்வதால் அந்நோய் ஏற்பட்ட தாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தி யாவின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. நம் முன்னோர்களைப் போல, இன் றைய தலைமுறையினர் உணவுப் பழக்கத்தில் சிறுதானியங்களைச் சேர்ப்பதன் மூலமே இக்குறைப் பாட்டினைத் தடுக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. அதனால், தற்போது சிறுதானியங்கள், பழங் கால உணவுகள் பற்றிய விழிப் புணர்வு கருத்தரங்குகள், விற்பனை கண்காட்சி மற்றும் கலாச்சார உணவு திருவிழாக்கள் நடத்துவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே.ராம சாமி 'தி இந்து'விடம் கூறியதாவது: தமிழகத்தில் 81 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. தற் போதைய மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.வருடத்தில் பெய்யும் மழையில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் மட் டுமே மாற்றம் இருக்கிறது. திடீரென மழை ஒரே நேரத்தில் கொட்டிவிடு கிறது. கடந்த காலத்திலும் இது போலத்தான் மழை பெய்தது. ஆனால், அப்போது மழை தண் ணீரை முன்னோர்கள், ஏரி, குளம், குட்டைகளில் சேமித்து வைத்து பயன்படுத்தினர். தற்போது கணக் கில்லாமல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் பாசனத்தில் சிக்கனம் மற்றும் சேமிப்பு இல்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் வறட்சி என்று சொல்கின்றனர். அதுபோல், தற்போது தண்ணீர் சிக்கனம், சிறுதானியங்கள் பயன் பாடு பற்றிய விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டுள்ளது. சிறுதானியங்கள், காய்கறி உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படாது. விவசாயி கள், பட்டத்தை நம்பி விவசாயம் செய்வதாலேயே தண்ணீர் பிரச் சினை ஏற்படுகிறது.மழை பெய்வதை பார்த்தும், நீர் இருப்பை கண்காணித்தும் விவ சாயம் செய்தால் 20, 30 மடங்கு லாபம் பெறலாம். இது விவசாயத் தில் மட்டுமே சாத்தியம். உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றார்.பசுமை அங்காடியில் சிறு தானிய உணவுப் பொருட்களை ஆர்வமுடன் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.

பருப்பு உற்பத்திக்கு ரூ. 82 கோடி ஒதுக்கீடு

வேளாண்மை பல்கலை. துணைவேந்தர் கே.ராமசாமி மேலும் கூறியதாவது: சிறுதானியங்கள் உற்பத்தி 9 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது, அதன் உற்பத்தி 29 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.தற்போது பருப்பு உற்பத்தி திட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்கு ரூ.82 கோடி ஒதுக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பருப்பு உற்பத்தியில் வழங்கப்படும் விதைகள், இடுபொருட்கள் தரமாக உள்ளன. பருப்பு, உளுந்து சாகுபடியில் ஒரே நேரத்தில் பூத்து காய்க்கும் ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்றார் அவர்.

 

Comments