விக்கல் வருவது ஏன்

விக்கல் வருவது ஏன்

*''விக்கல் வருவது இயல்பு காரமாக உள்ள உணவுகள் சாப்பிடும்போது விக்கல் வருவது இயல்பு. சர்க்கரை நோய், உடல் பருமன், அல்சர், நரம்பு பிரச்னை, வயிற்றில் அறுவை சிகிச்சை, பக்கவாதம், அல்சர் நோய்களுக்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் விக்கல் வர வாய்ப்புள்ளது. விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.

 

*இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

 

*நார்ச்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்கவும். சப்பாத்தி, பரோட்டா, எண்ணெயில் பொரித்தவற்றை கூடுமானவரை தவிர்க்கவும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

 

*சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

Comments