சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு.

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு.

சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது. சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., - ஐ.டி., படிப்புகளுக்கு, மே, ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடந்தன.  இதற்கான முடிவு, நாளை இரவு, 8:00 மணிக்கு, பல்கலை இணையதளத்தில் வெளியாகிறது.'மறுமதிப்பீடுக்கு, செப்., 22ம் தேதிக்குள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலை, தலைமை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் தெரிவித்து உள்ளார்.

Comments