தமிழகம், புதுவையில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 20 மி.மீ., கூடலூர் பஜாரில் 10 மி.மீ. மட்டுமே மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தமிழகத்தில் வெப்பநிலை பொது வாக இயல்பையொட்டியே இருக்கும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments