இணைப்பு தேவைதானா?

இணைப்பு தேவைதானா?

பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகள் இணைவதற்கு, இயக்குநர் குழு சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. அக்டோபரில் இதற்கான துவக்கம் மேற்கொள்ளப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்பு, பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர, மற்ற எல்லா வங்கிகளும் தனியார் வசத்திலிருந்தன.முதன்முதலாக, கேரளாவில் பாலை சென்ட்ரல் வங்கி "திவாலா'யிற்று. அப்போது மக்களின் அவநம்பிக்கையை நீக்க, ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. வலிமையான தனியார் வங்கிகள் நலிந்த சில தனியார் வங்கிகளை, ஏற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியது.இதன் அடிப்படையில்தான், கேள்விப்பட்டே இராத சில சிறிய வங்கிகள், (ஸீûஸயா மிட்லண்ட் வங்கி) கனரா வங்கியுடன் இணைந்தன. தமிழ்நாட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி இண்டோ கமர்ஷியலை ஏற்றுக்கொண்டது.அந்த நாளில் குறிப்பிடத்தக்க பெரிய இணைப்பு 1963-இல், பாண்டியன் வங்கி கனரா வங்கியுடன் இணைந்ததுதான். தமிழ்நாட்டில் சில கிளைகளே இருந்த கனரா வங்கிக்கு 84 கிளைகள் கிட்டின. பாண்டியன் வங்கி ஊழியர்களுக்கும், கனரா வங்கியின் ஊதியமே தரப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் வாதாடி வெற்றி பெற்றது.இத்தகைய நிகழ்வுகளால், பெரிய வங்கிக்கு என்ன அனுகூலம்? முதலாவது, அனுபவம் மிக்க ஊழியர்கள் கிடைக்கிறார்கள். இரண்டாவது, மையமான பெரிய ஊர்களில் கிளைகளைத் துவக்கப் புது இடம் தேட வேண்டிய அவசியமில்லை. தங்களுடைய கணக்கு வழக்கின் தன்மையை (அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ண்ய்ஞ் டழ்ர்ஸ்ரீங்க்ன்ழ்ங்) மற்ற வங்கி புரிந்துகொள்ள ஓரிரு மாதங்கள் ஆகலாம்.1969-இல், பல முக்கிய தனியார் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. எனவே "திவால்' ஆவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், வேறு பிரச்னை எழ ஆரம்பித்தது.கடன் இலக்கை எட்டுவதற்காகவும், அரசியல் அழுத்தங்களாலும் பல வங்கிகள் முன்னுரிமைக் கடன்களை வாரி வழங்கின. வெறும் "புத்தகப் பதிவை' (ஆர்ர்ந் உய்ற்ழ்ஹ்) மட்டும் காண்பித்து நிறைய லாபம் ஈட்டியதாக வங்கிகள் தங்கள் வரவு செலவைக் காட்டின.1991-இல், மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த சமயம், இந்த நிலைமையை மாற்றியமைத்தார். உண்மையிலேயே கடன் வசூல் ஆனால்தான் லாபமாகக் கருத வேண்டும் என்கிற விதிமுறையைக் கொணர்ந்தார்."வாராக் கடன்', "செயலற்ற சொத்து' போன்ற சொற்கள் புழங்கியது அப்போதுதான். அது நாள் வரை, திரும்பி வராத கடனை வழக்குரைஞரிடம் தந்து நிம்மதியாக இருந்து வந்த அதிகாரிகள் "விழித்து'க் கொண்டு கடன் வசூலில் அக்கறை செலுத்தினார்கள். இதனால் பலன் ஏற்பட்டது.2000-க்குப் பின்னர், வங்கியில் நேர்ந்த மாறுதல்கள் வரலாறு காணாதது. கணினி செயல்பாடு மெல்ல மெல்ல நுழைந்து, பெரும் ஆட் குறைப்பு ஏற்பட்டது. இன்று இல்லத்திலிருந்தே பணப் பரிமாற்றம் செய்கிற நிலை வந்துவிட்டது.தளர்த்தப்பட்ட பொருளாதாரம், தனியார் நிதி நிறுவனங்களின் மோசமான நிலைமை - போன்ற பல காரணங்களால் வங்கிகளுக்கு டெபாசிட்டுகள் குவிந்தன.வீட்டுக் கடன், நுகர்பொருள் கடன், கல்விக் கடன் போன்றவற்றை தாராளமாக வழங்கினார்கள். வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து, பல வங்கிகள் நட்டமடைந்தன. நோயாளிகளுக்கு ஊசி ஏற்றுவது போல, மைய அரசு பல வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளித்திருப்பது, சமீபத்திய நிகழ்வு.மேற்சொன்ன பின்னணியில், தாய் வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகள் இணையும் நிகழ்வைக் கவனிக்க வேண்டும். பிரதான வங்கியும் சரி, துணை வங்கிகளும் சரி - இரண்டும் ஒரே வகைதான். வலிமையான வங்கி - நலிந்த வங்கி என்ற பிரிவுக்கு இடமில்லை, அரசு வங்கிகளே ஏன் இவ்விதம் இணைய வேண்டும்? இந்த ஒருங்கிணைப்பினால், பாரத ஸ்டேட் வங்கி சர்வதேச அளவில் 45-ஆவது பெரிய வங்கியாக இருக்குமாம். புதிய வங்கி கையாளும் சொத்து மதிப்பு 37 லட்சம் கோடியாக உயரும். உலக அளவில், பெரிய கம்பெனி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி உத்தரவாதம் கொடுக்குமளவுக்கு, தகுதி ஏற்படும். இவைதான் சாதகமான அம்சம்.பாதக அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. ஏற்கெனவே மல்லையா விவகாரம், கடுமையான முறையில் வாராக் கடன் வசூல் போன்றவற்றால் பாரத ஸ்டேட் வங்கியின் நற்பெயர் ஓரளவு கெட்டிருக்கிறது.ஜூன் 30 காலாண்டு முடிவுகளின்படி, பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் அளவு 6.9 சதவீதம். பிற துணை வங்கிகளிடம் வாராக் கடன் இதைவிட சற்று அதிகம்தான். ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானரின் வாராக் கடன் மட்டும் கொஞ்சம் குறைவு - 6.2%. மொத்தத்தில், இந்த இணைப்பினால் பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் அளவு குறையக்கூடிய சாத்தியக் கூறு இல்லை. பழைய காலமாயிருந்தால், எல்லா பாரத ஸ்டேட் வங்கிகளின் - துணை வங்கி உள்பட - கணக்கு வழக்கு செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த நவீன மென்பொருள் செயல்பாட்டில், அதுபோலச் சொல்வதற்கில்லை.பொதுவான, புதிய மென்பொருளை, தரமான பிரபல நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில், வாடிக்கையாளர்களின் சேவை நிச்சயமாகப் பாதிக்கப்படும். வங்கி அதிகாரிகளின் வேலைப் பளுவும் கூடும்.மேலும், துணை வங்கிகளின் பங்குகளின் பங்கீட்டில் சிக்கல் இருக்கும் வாய்ப்புண்டு என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்; சில துணை வங்கிகளின் பங்குதார்களுக்கு, கூடுதல் பாரத ஸ்டேட் வங்கி பங்கு கிடைக்கும்; சில பங்குதாரர்களுக்கு குறைவு. ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் பங்குதாரர்களுக்கு நட்டம் ஏற்படும்.கடைசியாக, துணை வங்கியின் தனித் தன்மை போய்விடும்; இப்போது வளைகுடாவில் வசிக்கும் பல கேரள நண்பர்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூரிடம் ஒருவித கனிவு காண்பிக்கிறார்கள், கேரள அமைச்சர்கூட இது பற்றிக் கூறியுள்ளார்.பொதுநல வழக்கும் கேரளாவில் தொடுக்கப்பட்டிருக்கிறது. "சட்ட ரீதியான பலவித சிக்கல்கள் உள்ளன' என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.எவ்வகையில் பார்த்தாலும், இந்த ஒருங்கிணைப்பு தேவையென்று படவில்லை. உலக அளவில் பாரத ஸ்டேட் வங்கியின் நிலை உயர்ந்தாலும் அதற்காக அது கொடுக்கும் "விலை' அதிகமாகத்தானிருக்கும் என்று சொல்லவே தோன்றுகிறது.

Comments