தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட். எம்எட். படிப்புகளுக்கு புதிய கல்விக் கட்டணம்

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட். எம்எட். படிப்புகளுக்கு புதிய கல்விக் கட்டணம்

கூடுதல் கட்டணம் குறித்து புகார் செய்யலாம்

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு புதிய கல்விக்கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிஎட் படிப்புக்கு ஓராண்டுக்கு அதிகபட்சம் ரூ.37,500-ம், எம்எட் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.38,000-ம் கட்டணம் வசூலிக்கலாம்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகப் பதிவாளர் எஸ்.கலைச் செல்வன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தனியார் கல்வியியல் கல்லூரி களில் 2 ஆண்டு கால பிஎட், எம்எட். படிப்புகளுக்கும் அதேபோல், 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட், பிஏ.பிஎட் படிப்பு களுக்கும் நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயித் துள்ளது. ஓராண்டுக்கான கட்டண விவரம் பின்வருமாறு:

இந்த கல்விக் கட்டணம் 2016-17 (நடப்பு கல்வி ஆண்டு), 2017-18, 2018-19 ஆகிய 3 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கல்விக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கை கட்டணம், டியூஷன் கட்டணம், பல்கலைக்கழக பதிவு கட்டணம், நுழைவுக் கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வக கட்டணம், விளையாட்டு உப கரணங்கள் கட்டணம், கல்வி அல்லாத இதர செயல்பாடுகள் கட்டணம், மருத்துவ பரிசோதனை கட்டணம், ஆசிரியர் பயிற்சி கட்டணம், பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான கட்டணம், மேம்பாட்டு கட்டணம் ஆகிய அனைத்து விதமான கட்டணங்களும் அடங்கும்.

கமிட்டி நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் ரத்து, என்சிடிஇ அங்கீகாரம் ரத்து உள் ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டியிடமோ அல்லது பல் கலைக்கழகத்தில் இயங்கும் மாண வர் குறைதீர்ப்பு கமிட்டியிடமோ மாணவர்கள் புகார் செய்யலாம். கல்விக் கட்டண விவரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்லூரி அறி விப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் ரத்து, என்சிடிஇ அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Comments