கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ரியோ பாராலிம்பிக் தொடங்கியது

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், 15வது கோடைக்கால பாராலிம்பிக் (ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்) இன்று கோலாகலமாக துவங்கியது. இதில், 161 நாடுகளை சேர்ந்த சுமார் 4,300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 22 விளையாட்டுகளில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 19 பேர் கலந்து கொண்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க மரக்கானா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் அரங்கேறியது. வீல் சேர் மூலம் செய்யப்பட்ட சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. வலது கை செயலிழந்த கார்லோஸ் மார்டின் பியானோ மூலம் பிரேசில் தேசிய கீதத்தை இசைத்தார். தொடர்ந்து மேலும் பல நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இதன்பின் போர்ச்சுக்கல் மொழி அகர வரிசைப்படி நாடுகளின் அணிவகுப்பு நடந்தது. இதில், வீரர்கள் அவரவர் நாட்டு கொடிகளை ஏந்தி வந்தனர். போட்டிகளை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் வந்தபோது, ரசிகர்களின் கரகோஷத்தால் மைதானம் அதிர்ந்தது. இறுதியாக பிரேசில் தடகள வீரர் குளோடோலடா சில்வா, ேஜாதியை ஏற்றி வைத்தார்.

ரஷ்ய கொடியால் சர்ச்சை

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதால், பாராலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அணிவகுப்பின்போது, பெலாரஸ் அணியின் உறுப்பினர் ஒருவர் ரஷ்ய கொடியை ஏந்தி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Comments