குளிர்ந்த - சூடான காற்று வீசும் இறக்கையில்லா விசிறி

குளிர்ந்த - சூடான காற்று வீசும் இறக்கையில்லா விசிறி

மின்விசிறி என்றாலே இறக்கைகள் படபடக்க காற்று வீசும். ஆனால் நவீன தொழில்நுட்பம் இறக்கை இல்லாமலே காற்றை வீசும் புதுமை விசிறியை அறிமுகம் செய்திருக்கிறது. அதுவும் கோடை காலத்தில் குளிர்காற்றை வீசச் செய்கிறது. குளிர் காலத்தில் கதகதப்பான காற்றையும் வெளியிடும். மேலும் அறையில் உள்ள காற்று சுத்தமின்றி இருப்பதை அறிந்தால் தானாகவே செயல்பட்டு காற்றின் மாசை அப்புறப்படுத்திவிடும் சிறப்புடையது இந்த மின்விசிறி.டைசன் நிறுவனம் இந்த காற்றாடியை தயாரித்துள்ளது. குறிப்பிட்ட திசையில் மட்டும் விசிறும் வகையிலும் அல்லது 360 டிகிரி கோணத்தில் எல்லா பக்கமும் சீராக காற்று வீசும் வகையிலும் இதை செயல்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படும் இதற்கான அப்ளிகேசனை நிறுவிக் கொண்டால் மேற்கண்ட வசதிகளை செயல்படுத்த முடியும்.அமெரிக்காவில் செப்டம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகிறது இந்த நவீன விசிறி. விலை 600 அமெரிக்க டாலர்கள். மேஜை விசிறி மற்றும் கூரை விசிறிகளை பார்த்து சலித்த நமக்கு இந்த நவீன காற்றாடி மூலம் காற்று வீசும் காலம் தொலைவில் இல்லை.சீக்கிரம் கப்பலில் அனுப்புங்க, காற்று வரட்டும்...

Comments