மனித முடியை விட மெல்லியது கின்னஸ் சாதனை படைத்த கனடா தேசியக் கொடி.

மனித முடியை விட மெல்லியது கின்னஸ் சாதனை படைத்த கனடா தேசியக் கொடி.

நுண்ணிய தேசிய கொடி உருவாக்கி கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை  மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர்.

கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூடிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் இருவரும் இணைந்து கனடாவின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர். சிலிக்கான் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேசியக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கனடாவின் 150வது ஆண்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினையும் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

1.178 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசியக் கொடியை வெறும் கண்களால் காண முடியாது. எலக்ட்ரான் நுண்ணோக்கி உதவியுடனேயே பார்த்து ரசிக்க முடியும். மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடி கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. 

Comments