பலன் தராத புதிய ஓய்வூதியத்திட்டம் பணியாளர் சங்கம் அதிருப்தி

பலன் தராத புதிய ஓய்வூதியத்திட்டம் பணியாளர் சங்கம் அதிருப்தி

'அரசு பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பலன் தராத புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியது.

 சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:

அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 2003 ஏப்.,1 முதல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசு இத்திட்டத்தை 2004 ஜன., 1 முதல் நடைமுறைப்படுத்தியது. 'சம்பளத்தில் ௧௦ சதவீதம் சந்தாவாக பிடிக்கப்பட்டு, சம அளவில் அரசின் பங்கு தொகையும் அளிக்கப்படும்' என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கோ, பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கோ எந்த தொகையும் வழங்கப்படவில்லை; ஓய்வூதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை முழுமையான கணக்குச் சீட்டு கூட கிடைக்கவில்லை. கிடைத்த சிலருக்கும் கணக்கு சீட்டில், அவரவர் செலுத்திய முழு தொகையும் வரவு வைக்கப்படவில்லை. அரசு பங்களிப்பு தொகையும் சேர்க்கப்படவில்லை.

எந்த பலனும் தராத புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேற்கு வங்கம், திரிபுரா, கேரளாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் உள்ளது.

ஆந்திராவில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு அமைத்துள்ள புதிய ஓய்வூதியத் திட்ட வல்லுனர் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.

Comments