நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை.

நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை.

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவக் கல்லூரியில் 2017-ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பர் மாதம் 1, 2- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 7-ஆம் வகுப்புப் பயிலும் அல்லது தேர்ச்சி பெற்ற 11 முதல் 13 வயதுடையவராக இருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை, தி கமாண்டன்ட்,ஆர்ஐஎம்சி,டேராடூன்-248003 என்ற முகவரிக்கு கட்டணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.பொதுப் பிரிவினருக்கு ரூ.550,பட்டியல், பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.505 எனவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் 30-ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,சென்னை-600003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக எழுத்துத்தேர்வு நடக்கும். மேலும் விவரங்களுக்குwww.rimc.orgஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Comments