உலகைச்சுற்றி

உலகைச்சுற்றி

* உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு உள்ள லிபியாவில் பல பகுதிகளை பல்வேறு குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதில் கிழக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி கலிபா ஹப்தாரின் படைகள், ஐ.நா. ஆதரவு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 2 முக்கிய எண்ணெய் துறைமுகங்களை நேற்று கைப்பற்றின.

* இங்கிலாந்தின் மத்திய பகுதியில் உள்ள ராயல் லீமிங்டன் ஸ்பா என்ற நகரில் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவருக்கும், வேறொரு மதத்தை சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்ததாக தெரிகிறது. இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கோவிலுக்குள் நுழைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்தனர்.

* சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.

* ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஆளுங்கட்சி மட்டுமே வெற்றி பெற்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments