அழைப்பு உங்களுக்குத்தான்!

அழைப்பு உங்களுக்குத்தான்!

தூத்துக்குடி துறைமுகம் : தூத்துக்குடியில் இயங்கும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிக்கு 75 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் பயிற்சிப் பணிகள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை Chief Mechanical Engineer, V.O. Chidambaranar Port Trust, Tuticorin 628 004 என்ற முகவரிக்கு 15-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்யவும் மற்றும் விவரங்களை அறிந்து கொள்ளவும் www.mhrdnats.gov.in மற்றும் www.vocport.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

டி.என்.பி.எஸ்.சி. : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சப்-இன்ஸ்பெக்டர் (மீன்வளம்), போர்மேன் பணிகளுக்கு 16 பேரை தேர்வு செய்கிறது. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 6-10-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

யூ.பி.எஸ்.சி. : மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், பாதுகாப்புத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, மேல்நிலைக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் 66 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவம், சட்டம் மற்றும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-9-2016.

ஆய்வு மையம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மையத்தின் பெங்களூரு கிளையில் உதவி பேராசிரியர் பல்வேறு அலுவலக பணிகளுக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.nimhans.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் 17-9-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகம் : கோரக்பூரில் உள்ள மதன்மோகன் மாளவியா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 39 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விவரங்களை www.mmmut.ac.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். விண்ணப்பம் 15-9-2016-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

கல்வி மையம் : டாடா சமூகவியல் கல்வி மையத்தில் அலுவலக பணிகளுக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.tiss.edu என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-9-2016-ந் தேதி.

கன்டோன்மென்ட் போர்டு : ஜபல்பூரில் உள்ள கண்டோன்மென்ட் போர்டில் டாக்டர், நர்ஸ், உதவி ஆசிரியர், சபாய்வாலா உள்ளிட்ட பணிகளுக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.canttboardjabalpur.org.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 20 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். இது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 3-9- தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது.

ஐ.டி.பீ.பி. : இந்திய திபெத்திய எல்லைக் காவல் படைப்பிரிவில் 'சீப் வெட்னரி ஆபீசர், சீனியர் வெட்னரி ஆபீசர்' பணிக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கால்நடை அறிவியல் தொடர்பான படிப்புகளை படித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை செப்டம்பர் 3-9 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 2 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments