அறிவியல் சுரங்கம்

அறிவியல் சுரங்கம்

இணைய சீரியல்கள்!:

இணையம் வழியே, சந்தாதாரர்களால் மட்டுமே பார்க்க முடிகிற, 'வீடியோ ஸ்ட்ரீமிங்' முறை இந்தியாவிலும் சூடுபிடிக்கிறது. நவம்பரிலிருந்து ஹிந்தி சீரியல்களை தர, பாலிவுட் பிரபலங்களான விஷால் பரத்வாஜையும் விது வினோத் சோப்ராவையும், 'அமேசான் வீடியோ' ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ட்ரீமிங் முன்னோடியான, 'நெட்ப்ளிக்ஸ், சேக்ரட் கேம்ஸ்' என்ற ஆங்கில தொடரை, ஹிந்தியில் தயாரிக்க, அனுராக் கஷ்யப்பை ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ் சீரியல் உலகம் இன்னும் எதற்காக காத்திருக்கிறது?

பறக்கும் 'பலகை'கள்:

இந்தியாவில், ஏப்ரல் - -ஜூன் 2016ல், 9,80,000 பலகைக் கணினிகள் விற்பனையாகியுள்ளன. அதிக விற்பனை கண்ட நிறுவனங்களின் வரிசை இதோ: 1.கனடாவின், 'டேட்டாவிண்ட்,' 2.தெ.கொரியாவின், 'சாம்சங்', 3.'ஐபால்', 4.சீனாவின், 'லெனோவோ', 5.'மைக்ரோமேக்ஸ்.'

எகிறும் 'வைபை!':

இந்தியாவில், 19 ரயில் நிலையங்களில் கூகுள் அறிமுகப்படுத்திய இலவச வைபை சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மாதத்திற்கு, 20 லட்சம் பேரை எட்டியிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்த சேவை விரைவில் மேலும் பல ரயில் நிலையங்களுக்கும் கூகுள் அளிக்க இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் 'நறுக்':

'இன்ஸ்டாகிராம்' சேவையில், கணக்கு வைத்திருப்பவர்கள் இனி, தங்களைப் பற்றி அவதுாறான, அநாகரிகமான கருத்துக்களை யாரும் பதிவதை மறைக்க முடியும். குறிப்பிட சொற்கள், வாக்கியங்களை, 'பிளாக் லிஸ்ட்' செய்வதன் மூலம் இது சாத்தியம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது

Comments