‘நகரும் அரண்மனை’

'நகரும் அரண்மனை'

'நகரும் அரண்மனை' (பேலஸ் ஆன் வீல்ஸ்) என பெருமிதத்தோடு அழைக்கப்படும் இந்த ரெயில் சேவை 1982-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில சுற்றுலா மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது.இந்த ரெயில், புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு ஜெய்ப்பூர், ஜெய்சல்மீர், தோஜ்பூர், சவாய்மாதேபூர், சித்தோர்கர்-உதய்ப்பூர், பரத்பூர், ஆக்ரா வழியாக மீண்டும் டெல்லியை வந்து சேரும்.பயணிகள் ஒவ்வொருவருக்கும் உலகத் தரத்திலான சொகுசு அறை, தனித்தனி பாத்ரூம், எல்.இ.டி. டி.வி., வை-பை வசதிகளுடன் ஐந்து நட்சத்திர ஓட்டல் களுக்கு இணையான வசதிகள் கிடைக்கும். இந்த ரெயிலில் பயணம் செய்பவர்களை 'விருந்தினர்கள்' என்றே அழைக்கின்றனர்.கொழுப்பு இல்லாத உணவுகள், சமண உணவுகள், மன்னர்கள் கால சைவ, அசைவ உணவுகள், வடஇந்திய, தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படும். இதில் 'ராஜா கிளப்' என்றொரு தனிப்பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் கால உபசரிப்பு முறை, அரண்மனை போன்ற ரெயில் பெட்டிகளின் உள் அலங்கார வடிவமைப்பு போன்றவை பயணிகளை பழைய காலத்துக்கே அழைத்துச் செல்லும்.ஆண்டுதோறும் இந்த ரெயில், அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டெல்லி சப்தர்ஜங் ஸ்டேஷனில் இருந்து புறப்படுகிறது.ஐரோப்பாவின் ஓரியன்ட் சொகுசு ரெயிலுக்கு இணையான இந்த ரெயில் உலகின் மிக சொகுசான ரெயில் என 2012-2013-க்கான சுற்றுலா விருதைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment