SCROL

Thursday, September 29, 2016

சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறது இந்தியா

சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறது இந்தியா

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நமது பிராந்தியத்தில் எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது, சார்க் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களில் ஒரு நாட்டின் தலையீடு அதிகரித் திருப்பது போன்றவை, 19-வது சார்க் மாநாட்டை வெற்றிகர மாக நடத்துவதற்கு சாதகமாக இல்லை. இந்தச் சூழலில் இஸ்லா மாபாத்தில் வரும் நவம்பரில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவால் பங்கேற்க இயலாது. இத்தக வலை சார்க் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நேபாள நாட்டிடம் தெரிவித்துள் ளோம்" என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஆப்கானிஸ் தான், பூடான், வங்கதேசம் ஆகிய மேலும் 3 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கான ஆப்கா னிஸ்தான் தூதர் கடந்த வாரம் கூறும்போது, "இந்தியா மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து சார்க் மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆப்கானிஸ்தான் ஆராய உள்ளது" என்றார். இந்நிலையில் வரும் நவம் பரில் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனிடையே சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித் திருப்பது துரதிருஷ்டவசமானது என பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய மேலும் 3 நாடுகள் சார்க் மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment