SCROL

Friday, September 30, 2016

மூளையைப் பாதிக்கும் வாகனப் புகை

மூளையைப் பாதிக்கும் வாகனப் புகை

நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சாதாரண கண்களுக்குப் புலப்படாத சின்னஞ்சிறு இரும்புத்துகள்கள் மூளையில் படிந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

ஒரு கிராம் மனித மூளைத்திசுவில் லட்சக்கணக்கில் இவை படிந்திருக்கின்றன. இந்தத் துகள்கள் 'மேக்னடைட்' என்று அறியப்படுகின்றன.

வாகனப் புகையில் இருக்கும் மாசின் பெரிய துகள்கள் மூக்குவழியாக உள்வாங்கப்படும். அவற்றில் சிறியவை நுரையீரல் மூலம் ரத்தத்துக்குள் நுழையும். அதைவிடவும் சிறியவை, மூக்கை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மூலம் மூளைக்குள் செல்வதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளையைப் பாதிக்கும் அல்சைமர் போன்ற நோய்கள் உருவாக இதுவும் ஒரு காரணியாக அமையலாம் என்று கருதப் படுகிறது.

ஆனால் இது ஆரம்பகட்ட ஆய்வுதான். இந்த மேக்னடைட் துகள்களுக்கும் அல்சைமர் நோய்க்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment