ஆண்ட்ராய்டு போனில் அழிந்த காண்டாக்ட்களை மீட்கும் வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு போனில் அழிந்த காண்டாக்ட்களை மீட்கும் வழிமுறைகள்

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, நமக்கு பல்வேறு அம்சங்களை மிகவும் எளிமையாக வழங்கி வருவதே இதற்கு முக்கிய காரணமாக கூறலாம். ஸ்மார்ட்போன் என்றாலே என்றாவது பிரச்சனை செய்யும் என்றே அர்த்தம். பெரும்பாலான கோளாறுகளுக்கு காரணம் நாம் பயன்படுத்தும் விதம் தான். அந்த வகையில் ஆண்ட்ராய்டு போனில் தெரியாமல் அழிக்கப்பட்ட காண்டாக்ட்களை மீட்பது எப்படி என்பதைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்.

 

காண்டாக்ட்: முதலில் உங்களது காண்டாக்ட்கள் டிஸ்ப்ளே ஆகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்குப் போனின் காண்டாக்ட் லிஸ்ட் சென்று மெனு -> செட்டிங்ஸ் -> காண்டாக்ட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். பின் காண்டாக்ட்ஸ் டூ டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

 

லிஸ்ட்: காண்டாக்ட்ஸ் டூ டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்ததும் காண்க்ட் லிஸ்ட் தெரியும். இனி உங்களது போன் காண்டாக்ட்கள் மற்றும் ஆப் காண்டாக்ட்கள் தெரியும்.

 

ஜிமெயில்: இவ்வாறு செய்தும் காண்டாக்ட் தெரியவில்லை எனில் ஜிமெயில் மூலம் காண்டாக்ட்களை ரீஸ்டோர் செய்ய முடியும். இவ்வாறு செய்ய ஜிமெயிலில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

 

பயன்பாடு: ஜிமெயில் பயன்படுத்தி காண்டாக்ட்களை மீட்க உங்களது கருவியினை ஜிமெயில் முகவரியுடன் சின்க் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் உங்களது மின்னஞ்சல் காண்டாக்ட் தகவல்களை எளிமையாக மீட்க முடியும்.

 

இன்பாக்ஸ்: இவ்வாறு செய்ய கம்ப்யூட்டரில் ஜிமெயில் இன்பாக்ஸ் ஆப்ஷனினை கிளிக் செய்து இடது புறத்தில் இருக்கும் மெயில் ஆப்ஷன் சென்று காண்டாக்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

 

சர்ச் பார்: இனி ஜிமெயில் சர்ச் பாரின் கீழ் இருக்கும் மெனுவின் கீழ் இருக்கும் மோர் ஆப்ஷனினை கிளிக் செய்து ரீஸ்டோர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

 

கெடு: ஜிமெயிலில் உங்களது காண்டாக்ட்களை கஸ்டம் ரீஸ்டோர் செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகின்றது. இதற்கு முன் சேர்க்கப்பட்ட அனைத்து காண்டாக்ட்களையும் மீட்க முடியும். இந்தக் காலகட்டத்திற்கு பின் சேர்க்கப்பட்ட காண்டாக்ட்களை மீட்க இயலாது.

 

சின்க்: உங்களது காண்டாக்ட்களை சின்க் செய்ய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -> அக்கவுண்ட்ஸ் -> சின்க் -> சின்க் நௌ ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

 

பேக்கப்: இந்த பிரச்சனையில் மீண்டும் சிக்காமல் இருக்க உங்களது தரவுகளை கூகுள் பயன்படுத்தி பேக்கப் செய்ய வேண்டும். உங்களது கூகுள் அக்கவுண்ட் உங்களின் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

 

செட்டிங்ஸ்: இனி போனின் செட்டிங்ஸ் சென்று பேக்கப் மற்றும் ரீசெட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும், இவ்வாறு செய்த பின் உங்களது தரவுகள் பேக்கப் செய்யப்பட்டிருக்கும்.

Comments