சைக்கிள் ஓட்டும் ‘ரோபோ’

சைக்கிள் ஓட்டும் 'ரோபோ'

பொதுவாக மனிதர்கள் செய்யும் வேலைகளை அப்படியே செய்யும் எந்திரத்தைத் தான் 'ரோபோ' என்று அழைக்கிறார்கள். இன்றைக்கு மனிதர்களின் எத்தனையோ வேலைகளை இந்த மனித எந்திரங்கள் செய்கின்றன. பல விதமான ரோபோக்களை கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள் இப்போது மனிதர்களைப் போலவே சைக்கிள் ஓட்டும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளார்கள்.

ரோபோவை சைக்கிள் ஓட்ட வைப்பது சிரமமான காரியம். ஏனெனில் மனிதனை போன்று காற்றுக்கு ஏற்ப சமாளிக்கும் திறன் ரோபோக்களுக்கு கிடையாது. ஆனால் காற்றையும் சமாளித்து சைக்கிள் ஓட்டும் ஒரு ரோபோவை ஜப்பானின் மசானஹக்கோ யமகுச்சி கண்டுபிடித்துள்ளார். இந்த ரோபோ தனது பாதங்களால் சைக்கிளின் பெடலை அழுத்தி ஒய்யாரமாக சவாரி செய்கிறது. ஹேண்டில்பாரை தேவைக்கு ஏற்ப வளைத்து நெளித்து சரியான பாதையில் சைக் கிளை ஓட்டிச்செல்கிறது. சைக்கிளை எந்த திசையில் எங்கே ஓட்டிச்செல்ல வேண்டும் என்பதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுத்த முடியும். சொன்ன இடத்திற்கு சென்று சொல்லிய வேலையை முடித்துவிட்டு கச்சிதமாக திரும்பி வந்துவிடும் இந்த ரோபோ.

சைக்கிளில் ஒரு பொருளை வைத்து அதை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் கட்டளை இட்டால் அந்த ரோபோ அதை அந்த இடத்தில் கொண்டுபோய் சேர்த்து விடும். பீட்சா, பர்கர், கொரியர் போன்றவற்றை டெலிவரி செய்ய இதுபோன்ற ரோபோக்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும்.

Comments