மரக்கன்றுகள் நடும் 'ஸ்மார்ட் பிளான்டேஷன் ரோபோ' கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

மரக்கன்றுகள் நடும் 'ஸ்மார்ட் பிளான்டேஷன் ரோபோ' கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

திண்டிவனம் அருகே மயிலம் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு மின்னணு மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் பயிலும் மாணவர்கள் ரகுபதி, முகம்மது முபாரக், மணிபாரதி ஆகியோர் இணைந்து ரோபோ ஓன்றை வடிவமைத்து உள்ள னர். இது தொடர்பாக ரகுபதி, முகம்மது முபாரக் கூறியது:

இந்த ரோபோ தானாகவே நிலத்தைத் துளையிட்டு நாம் விரும்பும் ஆழத்துக்கு ஏற்ப மரக்கன்றை நட்டு நீர் ஊற்றும் வகையில் வடிவமைத்து உள்ளோம். 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டிலில் நீர் நிரப்பப்பட்டு, 5 வோல்ட் மின்சாரத்தின் மூலம் பம்ப் இயக்கப்பட்டு, நடப்பட்ட மரக்கன்றுக்கு நீர் ஊற்றும். அல்ட்ராசோனிக் சென்சாரை பயன்படுத்தி தனது வழித்தடத்தை நிர்ணயித்துக்கொள்ளும் வகையில் இதை வடிவமைத்துள்ளோம்.

சூரிய ஒளி சக்தியின் மூலம் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்பட்டு இந்த ரோபோ இயங்கும். இது ஒரு மணி நேரத்துக்குள் 50 மரக்கன்றுகளை கை போல வடிவமைக்கப்பட்ட கருவி மூலம் துல்லியமான இடைவெளியில் நடும்.

தோட்டங்களுக்கான பலவகை மரக்கன்றுகளை நட்டு, ஒரு திட்டமிட்ட பண்ணை அமைக்கவும் இந்த ரோபோ உதவியாக இருக்கும். இக்கருவியை உருவாக்க ரூ.4,500 செலவானது. இதற்கான காப்புரிமைக்கு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம் என்றனர்.

கண்டுபிடித்த ரோபோவுடன் ரகுபதி மற்றும் முகம்மது முபாரக். 

Comments