கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் வருவாய்த் துறைக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்யூர் வட்டாட்சியர் புஷ்பலதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில் ஆயக்குனம், நெற்குணம், தூதுவிளம்பட்டு, பூங்குணம், கோட்டைக்காடு, வேம்பனூர், முதலியார்குப்பம், செய்யூர் டி.இ.பிளாக், பெரிய வெளிக்காடு, புதுப்பட்டு, பவுஞ்சூர், மாணிக்குப்பம், நெடுமரம், மடையம்பாக்கம், பேரம்பாக்கம்.25 சதவீதம் கருணை அடிப்படையில், மேற்கண்ட 15 கிராமங்களில் உதவியாளர் பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பகத்தின் மூலம் உரிய இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது விண்ணப்ப மனுவுடன், கல்வித் தகுதிக்கான ஆதாரங்கள், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பக பணி மூப்பு அட்டை ஆகியவற்றுடன் வரும் 15-ஆம் தேதிக்குள் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

Comments