ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக பி.எஸ்.என்.எல் - வோடபோன் கைகோர்ப்பு.

ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன. அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் டேடா, விலையில்லா போன் அழைப்பு, ரோமிங் செலவு இல்லை என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் சந்தையில் உள்ள போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா,பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் மிகவும் தொய்வை சந்தித்துள்ளது.தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்காக தற்போது பி.எஸ்.என்.எல் - வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Comments