மஞ்சளின் மகிமை

மஞ்சளின் மகிமை

*மஞ்சள் என்றதும் மங்களம் தான் நினைவுக்கு வரும் அந்த அளவுக்கு சிறப்பானது மஞ்சள்.சந்தோஷமான இடங்களிலும் துக்கமான இடங்களிலும்  வரவேர்கபடும்   ஒன்று  இந்த மஞ்சள் தான்.இதன் சிறப்பிற்கு காரணம் அதன் நிறமே ஆகும்.எதாவது புது உடை எடுத்தல் அதிலும் மஞ்சள் இட்டு உடை அணிவது வழக்கம்.மஞ்சள் அதிகம் விளைவிக்க படுவது ஈரோடில் தான்.

 

*புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் தான் பிரதானமாக அனைத்து பொருட்களிலும் இட்டு இறைவனை வணங்குகின்றோம். சமையலுக்கும் மஞ்சள்தூளை பயன்படுத்துகின்றோம். பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசி நீராடுகின்றனர்.

 

*மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கக் கூடிய நிறமாகவும், அனைவருக்கும் ஏற்றதாகவும் அமைந்திருப்பதால் அனைவருக்கும் மஞ்சளைப் பிடிக்கின்றது. மஞ்சளில் பலவகை காணப்படுகின்றது. அவற்றில் பிரதானமானவை.பொதுவாக மஞ்சள் அனைத்து சரும நோய்களுக்கும் பயன் தரக்கூடியது.

 

*இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை 10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வர எத்தகைய உள்மூலமும் வெளிமூலமும் குணமாகும். தீராத பொடுகு, பேன் தொல்லைகளுக்கு மஞ்சள், வேப்பந்துளிர், குப்பைமேனி ஆகியவற்றை அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர நீங்கும்.

 

*பெண்களின் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பருகிட மாயமாய் மறைந்திடும்.மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது.

 

*மஞ்சள் புண்ணுக்கு மேல் பூசுவதற்கு சிறந்த மருந்தாகும். கட்டி பழுத்து உடைய, வெட்டுக்காயம், உள் காயம், தீக்காயம், சேற்றுப்புண், நகச்சுற்றி, தலையில் காயம், நரம்பு சிலந்தி போன்ற அனைத்திற்கும் வெளிபூச்சு மருந்தாக பயன்படுத்திடலாம். மஞ்சளை சுட்டு மூக்கில் வைத்து உறிஞ்சினால் மூக்கடைப்பு நீங்கும்.

 

*பசும்பாலுடன் மஞ்சள் தூளைக் கலந்து பருகினால் வறட்டு இருமல் நீங்கும். கஸ்தூரி மஞ்சள், புதினா, கருந்துளசி, உப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி பல் பொடி போல உபயோகித்தால் பல்வலி நீங்கும். குழந்தைகளின் வயிற்றுப் போக்கின் போது மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கும் நீங்கும் உடலும் வளம் பெறும்

Comments