தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோடும் வகையில் பெரம்பலூர் அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்கும் திட்டங்கள்

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோடும் வகையில் பெரம்பலூர் அரசுப் பள்ளிகளில் அறிவை வளர்க்கும் திட்டங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே, சிறந்த சிந்தனை மற்றும் படைப்புத் திறன் கொண்ட மாணவ சமூ கத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைப் பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம். தங்கள் குழந்தைகளைத் தனியார் கல்வி நிலையங்களில் படிக்க வைக்கும் அளவுக்கு கல்விக்காக பெரிதாக செலவழிக்கும் நிலையில் இம்மா வட்ட மக்களின் பொருளாதாரம் இல்லை. இதனால், இவர்கள் தங்கள் குழந்தைகளின் அறிவு தாகத்தைத் தீர்க்க பெருமளவு அரசு கல்வி நிலையங்களையே நாடுகின்றனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யராக இருக்கும் க.நந்தகுமார், இதேபோன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து கடும் உழைப்பால் உயர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஆனவர். இதனால், பின்தங்கிய இம்மா வட்டத்தின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைச் சிறந்த தலைமைப்பண்பு மிக்க நிர்வா கிகளாக உருவாக்கும் எண்ணம் அவருக்கு உருவானது. அதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாங்கிக் கொடுத்து படிக்க ஏற்பாடு செய்தார். இம்மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே தமிழ், ஆங்கில செய்தித்தாள் வாசிப்பு, விருப்பமான நூல்கள் படிப்ப து, சினிமா பார்த்து விமர்சிப்பது ஆகிய பழக்கங்களை வளர்க்கும் வகையில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெரம்பலூரில் உள்ள 76 அரசுப் பள்ளிகள், 9 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களை வாசிக்க பள்ளி களில் நேரம் ஒதுக்கப்படுகிறது. செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்திகள், தகவல்களில் இருந்து மாதம்தோறும் கேள்விகள் தயார் செய்து, 'நீங்களும் ஆகலாம் சாம் பியன்' எனும் பெயரில் விநாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. வட்டார அளவில் கல்வி நிறு வனங்களுக்கிடையே நடைபெறும் இப்போட்டிகளில் சிறந்த இடத்தை பிடிக்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து பின்னர் அவர்க ளுக்கிடையே மாவட்ட அளவி லான போட்டி நடத்தி, சிறப்பிடம் பெறுவோரை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கி கவுரவிக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகம் உருவாக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு மாணவரும் அவரவர் விரும்பும் நூல்களை எடுத்துப் படிக்க அறிவுறுத்தப்ப டுகின்றனர். நூல்களைப் படித்து அதில் இருந்து அந்த மாணவர் புரிந்துகொண்ட விஷயங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். வட்டார அளவில் சிறந்த கட்டுரை படைக்கும் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. உலக அளவில் பாராட்டு பெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்ப டங்கள் மாதம் ஒருமுறை மாணவர் களுக்குக் காண்பிக்கப்படுகிறது. மொழி புரியவில்லை எனினும் காட்சிகள் வழியே அந்தத் திரைப் படத்தின் கருத்துகளை உணர்ந்து மாணவர்கள் ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்தி லும் சிறந்த கட்டுரை எழுதும் 10 பேர் வீதம் மாவட்டத்துக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் அறிவை மேலும் விசாலமாக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவியல், கல்விச் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர் . திருச்சி கோளரங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகம், பாரதிதா சன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்களிடையே இதுபோன்ற நிறுவனங்களில் படிக்க, பணியாற்ற விரும்பும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் க.முனுசாமி கூறியபோது, "பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, ஆதிதிராவிடர் நலத்து றையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பாடத்திட்ட கல்விக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் பொது அறிவு, சிந்தனை, படைப்புத் திறன், எழுத்துத்திறன், கருத்தை வெளிப்படுத்தும் திறன், மேடை அச்சம் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு திறமைகள் வளர்க்கப்ப டுகிறது. இதனால், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் திறமையை இவர் கள் பெறுவார்கள். தமிழகத்தி லேயே பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதைக் கேள்விப்பட்டு பிற மாவட் டங்களிலும் இத்திட்டத்தைச் செயல் படுத்த பலர் எங்களிடம் தகவல்க ளைக் கேட்டுள்ளனர்" என்றார். பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா நிகழ்ச்சி. திருச்சி கோளரங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்களிடையே இதுபோன்ற நிறுவனங்களில் படிக்க, பணியாற்ற விரும்பும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment