ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி இண்டர்நெட் கட்டணம் குறைப்பு !

ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி இண்டர்நெட் கட்டணம் குறைப்பு !

ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி' நிறுவனமும், 'இன்டர்நெட்' கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. 'குறைந்த கட்டணத்தில், இன்டர்நெட் சேவை வழங்கப்படும்' என, பிப்ரவரியில் அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் அறிவித்தது. இதற்காக, 2 எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில், 'ஆம்பல், மகிழம், முல்லை, குறிஞ்சி' ஆகிய, நான்கு திட்டங்களும்; 4 எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில், 'வாகை, செங்காந்தள்' ஆகிய, இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.முதற்கட்டமாக, சிறிய மாவட்டங்களில், 10 இணைப்புகள்; பெரிய மாவட்டங்களில், 25 இணைப்புகள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தலால் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இன்டர்நெட் சேவையை அரசு கேபிள், 'டிவி'விரிவுபடுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ 4 'ஜி' வருகையால், இன்டர்நெட் சேவையில், 249 ரூபாய்க்கு, 300 ஜி.பி., அளிப்பதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால், அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம், இன்டர்நெட் இணைப்பு பெற வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, அந்த நிறுவனமும் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதை கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

Comments