வேலைவாய்ப்புப் பயிற்சியின் மூலம் ஆட்டிசம், மன வளர்ச்சி பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைக்கும் தொண்டு மையம்

வேலைவாய்ப்புப் பயிற்சியின் மூலம் ஆட்டிசம், மன வளர்ச்சி பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைக்கும் தொண்டு மையம்

மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆட்டி சம் பாதித்தவர்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சி அளித்து அவர் களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வருவதோடு மட்டுமில்லா மல் மனரீதியாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது கோவை யைச் சேர்ந்த தொண்டு மையம். கோவை கணுவாய் பகுதியில் மனவளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தால் பாதிக் கப்பட்டோரின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து 'சாரதி பேமேக்' என்ற தொண்டு நிறுவனத்தை, கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கினர். இதன் மூலமாக, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அரசின் திட்டங்களைப் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி, திட்டத்தின் பலன்களைப் பெற்றுத் தருவதோடு, அறிவு சார் குறைபாடு உள்ள இளைஞர் களுக்கு தொழிற்பயிற்சியும் அளிக் கிறது. இதன் பின்னர், தகுந்த வேலைவாய்ப்பை பெற்றுத் தருவ தற்கும் இந்த அமைப்பு உதவுகிறது. கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 27 பேர் தற்போது பயிற்சி எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து சாரதி பேமேக் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சமரச பாண்டியன் கூறியதாவது: மூளை வளர்ச்சி குன்றிய 95 பெற்றோர் ஒன்று சேர்ந்து உரு வாக்கிய அமைப்பாகும். இந்த அமைப்புக்காக 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை அரசு வழங்கியது. மன வளர்ச்சி குன்றியவரை ஓர் இடத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக உட்கார வைப்பது மிகப்பெரிய சவாலான காரியம். ஆனால், அவர்களைப் பழக்கப்படுத்தி, சராசரி மனிதர்களைப்போல் பாவித்து, தொழிற்பயிற்சி அளித்து வருகிறோம். முதலில் ஓர் இடத்தில் உட்கார மறுக்கும் அவர்கள் ஒருகட்டத்தில் தானாக அமர்ந்து வேலை செய்கின்றனர். கடிதத்துக்கான கவர் தயார் செய்வது, செயற்கைப் பூக்களைக் கொண்டு அலங்கார மாலை தயாரிப்பது, ஜன்னல் கவர், நாப் கின் தயாரிப்பு ஆகியவை தொடர் பாக அவர்களுக்குப் பயிற்சி அளிக் கிறோம். இதேபோல், பாதிக்கப் பட்டவர்களின் பெற்றோர்களும் இந்தப் பணியை செய்கின்றனர். இந்த வேலைவாய்ப்புப் பயிற்சி யில் கலந்துகொண்டு பொருட் களைத் தயாரிக்கும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும், ஆட்டிசம் பாதித்தவர்களுக்கும் உதவித் தொகையாக மாதம் ரூ.500, அவர் களின் பெற்றோருக்கு ரூ.1,500 வழங்கப்படுகிறது. பள்ளிகளில் சென்று படிக்க முடியாமல் இருக்கும் இவர்களுக்கு இவ்வாறு தொழிற்பயிற்சி அளிப்ப தன் மூலமாக அவர்களால் சுய மாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றோருக்கு ஏற்படுத்தி உள்ளோம். இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு அரசு உதவினால் எங்களால் இன்னும் ஊக்கமாக செயல்பட முடியும் என்றார். இதுகுறித்து மன வளர்ச்சி குன்றிய குழந்தையின் தாயார் பிரமீளா மேரி கூறும்போது, ''வீட்டில் இருக்கும்போது எனது மகன் அடிக்கடி கோபப்படுவான். அப்போது, கட்டுப்படுத்தவே முடி யாது. ஆனால் இங்கு வந்த பின்னர் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறான். கலைத்திறன் மிக்க பொருட்களை வடிவமைப்பதால் அவனால் கை, கால் நடுக்கம் இல் லாமல் ஒரு வேலையைச் செய்ய முடிகிறது. இது நல்ல மருத்துவ முறையாகவும் இருக்கிறது'' என்றார். வேலைவாய்ப்புப் பயிற்சி பெற்று வரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் விக்னேஷ் கூறும்போது, ''வேலாண்டிபாளையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து வர வேண்டும். முன்னதாக, பெற் றோர்தான் அழைத்து வந்து விட்டுச் செல்வார்கள். தற்போது, நானே பேருந்தில் ஏறி வந்துவிடுகிறேன். இங்கு, கவர் ஒட்டும் வேலை, ஜன்னல் கவர் செய்யும் வேலை களை கற்றுக்கொண்டு பொருட் களைத் தயாரிக்கிறேன்'' என்றார். இதேபோல், தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் 2 பேருந்துகளில் பயணம் செய்து தனியாக பயிற்சி மையத்துக்கு வந்து செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளதாக ஆட்டிசம் பாதிப்பு இளைஞர் பாலாஜி கூறினார். கோவை கணுவாயில் செயல்படும் சாரதி பேமேக் மையத்தில் அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கும் ஆட்டிசம் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

Comments