ஆசிரியர்கள் உள்ளியிருப்பு போராட்டம்.

ஆசிரியர்கள் உள்ளியிருப்பு போராட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் கடந்த 3ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என குறுசெய்தி அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 2ந் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட ஒருதரப்பு ஆசிரியர்கள்பள்ளியை திறந்து பாடம் நடத்தி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டதாக தெரிகிறது.இதை கண்டித்தும், குறு செய்தியை எழுத்து பூர்வ உத்தரவாக வழங்க கோரியும், 3ந்தேதி தேதி பள்ளி செயல்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட ஆசிரிய அமைப்புகள் அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், அலெக்சாண்டர் ஆகியோர் முன்பு அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments