கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:வாலாஜாபேட்டை வட்டத்துக்கு உள்பட்ட குடிமல்லூர், வேலம் ஆகிய வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.வாலாஜாபேட்டை வட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 21 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் 21 முதல் 32 வயது வரையும், பிற வகுப்பினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்குள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments