SCROL

Thursday, September 29, 2016

கண் அறுவைச் சிகிச்சை செய்த ரோபோ!

கண் அறுவைச் சிகிச்சை செய்த ரோபோ!

இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவைச்சிகிச்சை செய்து, அவரது பார்வையை வெற்றிகரமாக மீட்டுத்தந்திருக்கிறது, ஒரு ரோபோ.

இப்படி ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள ஓர் எந்திரமனிதன் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

பில் பியர் என்ற நபரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பகுதி தடிமனான மிகவும் மெல்லிய படலத்தை, எந்திரமனிதனை வைத்து உரித்து எடுத்த பிறகு, அந்நபரின் ஒரு கண் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த எந்திரமனிதனின் கையில் இருக்கும் வடிகட்டிகள், மென்மையான செயல்முறைகளை மிகவும் துல்லியமாகச் செயல்படுத்தி இந்த அறுவைச்சிகிச்சையை நிறைவேற்றி இருக்கின்றன.

கண் அறுவைச்சிகிச்சையில் புதிய யுகத்தை இது தொடங்கி வைத்திருப்பதாக ஆக்ஸ்போர்டில் இந்த அறுவைச்சிகிச்சையை மேற்பார்வை செய்த பேராசிரியர் ராபர்ட் மெக்லாரன் கூறினார்.

தன்னுடைய கண் பார்வையை மீட்க எந்திர மனிதனை பயன்படுத்தி இருப்பதை தேவதைக் கதைகளில் வருகின்ற நிகழ்ச்சிபோல உணர்வதாக குறிப்பிட்ட கண் நோயாளியான பில் பியர் கூறியிருக் கிறார்.

No comments:

Post a Comment