KALVISOLAI TNPSC

Sunday, 25 September 2016

‘சார்ஜ்’ பிரச்சினையை தீர்க்கும் கையடக்க காற்றாடி

'சார்ஜ்' பிரச்சினையை தீர்க்கும் கையடக்க காற்றாடி

ஸ்மார்ட்போன், டேப்லட் என நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. இவற்றுக்கு மின்னூட்டம் ('சார்ஜ்') செய்து பயன்படுத்துவது சவுகரிய குறைவான பணிகளில் ஒன்று. குறிப்பாக நீண்டதூர பயணம் மேற்கொள்ளும்போது நமது எலக்ட்ரானிக் கருவிகளுக்கான 'சார்ஜ்' பிரச்சினைகள் பெரும் அவஸ்தையை உண்டாக்கும். இந்த சிரமத்தை எதிர்கொள்ள 'சோலார் பேனல் சார்ஜர்'கள் இதற்கு முன்னர் அறிமுகமாகி இருந்தன. தற்போது மேலும் ஒரு கருவி, 'சார்ஜிங்' கருவிகளுக்கான நண்பனாக அறிமுகமாகி உள்ளது.

கையடக்க காற்றாலைதான் இந்த ஆபத்பாந்தவனாகும். சூரிய ஒளி இல்லாத காடுகளிலும், நீர்நிலைகளிலும்கூட இதை பயன்படுத்த முடியும். 'எஸ்ட்ரீம்' எனப்படும் அமெரிக்க நிறுவனம் இந்த கையடக்க காற்றாடியை உருவாக்கி உள்ளது. தண்ணீருக்குள் சுழலும் 'ஹைட்ரோ பீ' எனும் காற்றாடி மற்றும் 'புளூபிரீடம்' எனும் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காற்றாடி என இரு வகை காற்றாடிகளை அறிமுகம் செய்துள்ளனர்.

கையடக்க காற்றாலையின் மொத்த எடை 800 கிராம்தான். 21 செ.மீ. அங்குல இறக்கை கொண்டது. இறக்கைகளை கழற்றி மடித்தால் சிறிய காபி பிளாஸ்க் போல கையில் எடுத்து செல்லலாம். 5 வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆற்றல் கொண்டது. 6400 மில்லி ஆம்பியர் பேட்டரியில் சக்தியை சேமித்து வைக்கும். இவற்றை நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் கருவிகளுக்கு பரிமாறிக் கொள்ளலாம். இதை வருகிற ஜனவரிக்குள் விற்பனைக்கு கொண்டு வர 'கிக்ஸ்டாட்டர்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. விலை 180 அமெரிக்க டாலர்கள்.

No comments:

Post a comment