இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்

இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்

How many people have ever lived on this planet? எனது அறிவு டோஸ்களை விரும்புவோருக்கு நன்றாகவே தெரியும், நான் எப்பொழுதும் ஏதும் வித்தியாசமான கேள்விகளுக்குப் பதில்களை தேடுபவன் என்று. அது போன்று தான் இந்தக் கேள்வியும் கூட. உங்களில் யாராவது இன்று வரை நமது உலகில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? இல்லையா? சரி பரவாயில்லை, இன்று அதற்குரிய பதிலை நானே உங்களுக்குத் தருகிறேன்.

இந்த உலகத்தில் இதுவரை மொத்தம் எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்? இப்படியெல்லாம் யார் சிந்திப்பார்கள் என நீங்கள் யோசிக்கலாம்! ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி யோசித்து அதற்கு விடையும் கூட உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பினர் கொண்டு வந்துள்ளனர். அதன்படி உலகில் இன்று வரை சுமார் 108 பில்லியன், அதாவது 108,000,000,000 மக்கள் பிறந்து வாழ்ந்து வந்துள்ளனர்! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றவில்லையா?

இதற்கான கணக்கினை கி.மு. 50,000 இலிருந்து தொடங்கினர். அப்போதுதான் நவீன மனிதர்கள் ஆகிய ஹோமோ சேப்பியென்ஸ் (homo sapiens) தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன், வாழ்க்கைக்குரிய ஆதாரங்களைப் பெருகிக்கொண்டே வந்ததால் நாம் தற்போது இவ்வளவு அதிகமான மக்கள் தொகையில் இருக்கிறோம். இதனை பின்வரும் கால அட்டவணை மூலம் நீங்கள் அறியலாம்.

1. கி.மு 8,000 – 5 மில்லியன் மக்கள்

2. கி.பி 1 – 300 மில்லியன் (45 மில்லியன் ரோமன் ஆட்சிக்குரிய பகுதியில் மட்டும்)

3. கி.பி 1650 – அரை பில்லியன்

4. 19 வது நூற்றாண்டு – 1 பில்லியன்

5. இன்று – 7.1 பில்லியன் மற்றும் கூடிக்கொண்டே செல்கிறது.

மொத்தமாக அனைத்தையும் சேர்த்தால் இதுவரை வாழ்ந்தவர்களுக்கான எண்ணிக்கை சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

Comments