நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.

நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரலாய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, நாளை வியாழக்கிழமை (செப். 8) நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி இன்று புதன்கிழமை இரவு நடைபெறுகிறது. மாதா பிறந்த நாள் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செப். 17-ஆம் தேதி சனிக்கிழமையைப் பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments