மனிதன் உருவாக்கிய தீவு

மனிதன் உருவாக்கிய தீவு

ஜப்பான் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி உலகம் அறிந்ததே. இந்த முன்னேற்றம் அவர்களின் அபாரமான அறிவைச் சார்ந்தது. அத்தகைய அறிவுடையவர்கள் தனியாக ஓர் தீவையே உருவாக்க முயற்சி செய்ததை நீங்கள் அறிவீர்களா?

ஜப்பானில் 'ஒசாகா' விமான நிலையம் மிகவும் கூட்ட நெரிசலுடன், அதிகமான விமானங்கள் தரையிறங்குவதும் மேல் செல்வதுமாகக் காணப்பட்டது. இதைக் குறைக்க அந்த அரசு ஓர் புது விமான நிலையம் கட்ட முயற்சி செய்தது. அவர்கள் நாட்டில் அதற்குப் போதிய இடம் இல்லாததால் தனியே கடலின் நடுவில் ஒரு தீவை உருவாக்கி அங்கு விமான நிலையம் கட்ட முடிவெடுத்தனர்.

1980 களின் பிற்பாதியில் கட்ட ஆரம்பித்து 1994 ல் கன்சாய் விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் ஒசாகா வளைகுடாவின் நடுவில், ஒசாகா நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒசாகா விமான நிலையம் இப்போது கூட்ட நெரிசல் இல்லாமல் உள்ளூர் விமானங்களுக்கு மட்டும் சேவை செய்து வருகிறது.

இந்த அற்புதத் தீவை கட்டும்போது நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 10,000 வேலையாட்கள் சுமார் 3 ஆண்டுகள் உழைத்தனர். இந்தத் தீவையும், ஜப்பான் நாட்டையும் இணைக்க 1990 ல் மிகப்பெரிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டது.

Comments