உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...

* வட கொரியா 5-வது முறையாக கடந்த 9-ந் தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. அதைத் தொடர்ந்து 2-வது முறையாக அமெரிக்காவின் 'பி-1 பி' ரக போர் விமானங்கள் இரண்டு, தென் கொரியாவின் மீது பறந்தன. வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி இது என கருதப்படுகிறது.

* அதிகாரிகள் ஊழல் செய்து வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் கவனம் செலுத்த சீனா முடிவு செய்துள்ளது.

* கெய்ரோ மருத்துவமனை ஒன்றில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 9 போலீசாருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்து எகிப்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* ஆஸ்கார் பரிசு வென்ற ஹாலிவுட் சினிமா இயக்குனர் கர்ட்டிஸ் ஹான்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 71. அவரது மரணம், இயற்கை மரணமாகத்தான் இருக்கும் என யூகிக்கப்படுவதாக போலீசார் கூறுகின்றனர்.

* இந்தோனேசியாவில் கேரட் பகுதியில் பெய்த பலத்த மழையால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் பலியாகி விட்டனர்.

Comments