மருத்துவ தூதன்

மருத்துவ தூதன்

சாலை வசதி இல்லாத, தொலைதுாரப் பகுதிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய மருந்துகள், ரத்தம் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காகவே படைக்கப்பட்டது, 'ஜிப்லைன்' என்ற ட்ரோன். ஆறு, எட்டு விசிறிகள் கொண்ட வழக்கமான ட்ரோன்களைப் போல இல்லாமல், குட்டி விமானம் போல இருக்கும் இந்த ட்ரோன், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் பறந்து சென்று, இலக்கை அடைந்ததும், குட்டி பாராசூட் மூலம் மருந்து பெட்டியை போட்டுவிட்டு, கிளம்பிய இடத்திற்கே திரும்பி விடும். ஆப்ரிக்க கண்டத்திலுள்ள ருவாண்டா நாட்டு அரசின் ஒத்துழைப்புடன், அங்குள்ள கிராமங்களுக்கு மருந்துகளை ட்ரோன்கள் மூலம் அனுப்புகிறது ஜிப்லைன். பேரிடர் காலங்களிலும் ஜிப்லைன் உதவும்

Comments