இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு மட்டும் விதிவிலக்கு

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு மட்டும் விதிவிலக்கு

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலை பல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்த மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு சென்று படிக்க இயலாதவர் களுக்கும் பணியில் இருந்துகொண்டு படிப்பை தொடர விரும்புவோருக்கும் கைகொடுப்பது தொலைதூரக்கல்வி படிப்பு கள்தான் (அஞ்சல்வழி கல்வி திட்டம்), தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து படித்தும் வருகின்றனர். தொழில் நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம்கூட தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கு கிறது. பிஎட் படிப்பும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது.

அதிகார எல்லை

ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட அதிகார எல்லை (Territorial Jurisdiction) வரையறுக்கப்பட்டுள்ளது. உதார ணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை உள் ளடக்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்படு கின்றன. அதேபோல், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

தற்போது பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. தேர்வு மையங் களையும் நிறுவி வருகின்றன. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் படிக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது.

யுஜிசி உத்தரவு

இந்த நிலையில், பல்கலைக் கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகள் நடத்துவதற்கும் தேர்வு மையங்கள் அமைப் பதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தக்கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், திறந்தநிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தவும், தேர்வு மையங்களை நிறுவவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

யுஜிசி-யின் இந்த உத்தரவின்படி, இனிமேல் தமிழக பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தேர்வு மையங் களையும் அமைக்க முடியும் உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகம் இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த இயலும். அங்கு மட்டுமே தேர்வு மையங்களையும் அமைக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள ஒரே திறந்த நிலை பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த யுஜிசி அனுமதி அளித்திருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் 'தி இந்து'விடம் தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.பில், பிஎச்.டி. படிப்புகளை மீண்டும் ரெகுலர் முறையில் நடத்துவதற்கு யுஜிசி அனுமதி அளித்திருப்பதாகவும் அப்படிப்பு கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யுஜிசி உத்தரவுக்கு தடை

இதற்கிடையே, யுஜிசியின் உத்தரவுக்கு சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றிருக்கின்றன. எனவே, அப்பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொலைதூரக் கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகரிடம் கேட்டபோது, "யுஜிசி உத்தரவுக்கு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தடை ஆணை பெற்றிருக்கிறோம். எனவே, வழக்கம்போல் தொலை தூரக்கல்வி படிப்புகள் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களைப் போன்று பல பல்கலைக்கழகங்களும் இது போன்று தடை ஆணை பெற்றிருக்கக் கூடும்" என்றார்.

 

No comments:

Post a Comment