இயற்கை விநோதங்கள்!

இயற்கை விநோதங்கள்!

l

இத்தாலியில் உள்ள ஆர்மினியா என்ற அருவியில் குளிர் காலத்தில் வெந்நீரும் வெயில் காலத்தில் குளிர்ந்த நீரும், பிற காலங்களில் இயல்பாகவும் நீர் விழுகிறது.

l

விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பயணம் செய்யும்போது 24 மணி நேரத்தில் 16 முறை சூரியனின் உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனமாவதையும் பார்ப்பார்கள்.

l

ஆந்திர மாநிலம் அனந்த பூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திம்மம்மா மாரிமானு என்று பெயரிடப்பட்ட ஆலமரம். இது சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஆலமரங்களில் இதுவும் ஒன்று.

l

உலகிலேயே மிக உயரமான செடி மாக்ராஸைடிக்ஸ் பைரீஃபெரா என்ற செடியே. இது கடற்பாசி இனத்தைச் சார்ந்தது. இதன் உயரம் 183 மீட்டர். இது தென் அமெரிக்காவில் கடல் பகுதியில் காணப்படுகிறது.

l

உலகிலேயே மிக உயரமான மரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. செக்கோயா மரம் என்றழைக்கப்படும் இதன் உயரம் 23.8 மீட்டர்.

l

அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் குயிங்கோ என்ற ஆறு 6,590 கிலோ மீட்டர் தூரம் ஓடி, கலஹா என்ற பாலைவனத்தில் பாய்ந்து ஆவியாகிறது.

l

ஜெய்பூரில் உள்ள காம்பார் ஏரியில் உள்ள தண்ணீரில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை ஏரியில் உள்ள நீர் உப்பாகவும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இனிப்பாகவும் இருக்கும்.

l

உலகில் உள்ள எல்லா நதிகளும் நிலநடுக்கோடை நோக்கிப் பாயும்போது, நைல் நதி மட்டும் நிலநடுக் கோட்டுக்கு எதிர்த் திசையில் பாய்கிறது.

l

வட துருவத்தில் குளிர் காலத்தின்போது சூரியன் உதிக்காது. அதனால் தொடர்ந்து 106 நாட்கள் இருண்டு கிடக்கும்.

l

ஹானலூனாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் தண்ணீர் மேலிருந்து கீழே விழாமல், கீழிலிருந்து மேல் நோக்கிப் பாய்கிறது.

l

உலகில் மிகப் பெரிய கரையான் புற்றுகள் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள ஒருசில கரையான் புற்றுகள் 30 அடி உயரம் அளவுக்கு இருக்கின்றன.

Comments