வலைஞன்

வலைஞன்

ட்ரோன்களை பொழுதுபோக்கிற்காக பறக்கவிடுபவர்கள், சிலசமயம் விதியை மீறி, விமான நிலையம், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் ட்ரோன்களை ஏவி விடுவதுண்டு. இதை தடுக்க, ஜப்பானிலுள்ள டோக்கியோ நகர போலீஸ், ஒரு வழி கண்டுபிடித்துள்ளது. அத்துமீறும் ட்ரோன்களை பிடிக்க, வலை வீசும் ட்ரோன் ஒன்றை அவர்கள் பயன்படுத்துகின்றனர். பிடிக்க வேண்டிய ட்ரோனுக்கு மேலே பறந்து போய், அதன் விசிறியில் வலை படும்படி செய்ய, அந்த ட்ரோன், போலீஸ் ட்ரோனின் வலையில் சிக்கிவிடுகிறது. ட்ரோனை, ட்ரோனால் பிடிக்கும் உத்தி!

Comments