உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...

* மலேசியாவில் இருந்து 30 டன் உரத்துடன் சென்ற கப்பலை இந்தோனேசிய அதிகாரிகள் சிறை பிடித்தனர். அந்த உரம், வெடிகுண்டு தயாரிப்பதற்காக ஏற்றி வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கப்பல் சிப்பந்திகளிடம் துருவித்துருவி விசாரணை நடத்தப்படுகிறது.

* சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்த நிலை மாறி, இப்போது அங்கு முதியோர்களின் எண்ணிக்கை பெருகி, இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்து வருவது பிரச்சினையாகி வருகிறது. இந்த நிலையில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள யிசாங் நகரில் இளம் அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிறப்பு விகிதம் கூடுவதற்காக இந்த வினோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், மெக்சிகோ மக்களின் பாதுகாப்புக்காக அந்த சாத்தானிடம் பேசத்தயார், ஆனால் இரு தரப்பு உடன்பாடு என்ற ஆபத்தை செய்ய முன்வரமாட்டோம்" என மெக்சிகோ பொருளாதார மந்திரி இல்டெபோன்சோ, நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.

* துருக்கியில் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் நடத்திய புரட்சி முயற்சிக்கு துணை போனதாக தொழிலாளர் நலத்துறையின் ஊழியர்கள் 785 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புரட்சிக்கு காரணம் என கை காட்டப்படுகிற அமெரிக்க வாழ் மதகுருவுடன், இவர்கள் உறவு வைத்திருந்ததாக குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments