இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, முதலில் தங்க நகைகளை வாங்குவதில் தான் வீட்டிலுள்ளவர்கள் கவனத்தினை செலுத்துவார்கள். அதில் தான் மதிப்புள்ளது எனவும் எண்ணுகிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவியுள்ள எண்ணங்களில் ஒன்று. உலகில் உள்ள மொத்த தங்கத்தில் இந்தியாவின் இல்லத்தரசிகளிடம் மட்டும் சுமார் 11% உள்ளது. அதாவது 18,000 டன் தங்கம் இவர்களிடம் உள்ளது. மேலும் இதன் அளவு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கையில் இருப்பதை விட அதிகம். சுமார் 329 பில்லியன் டாலர் மதிப்புப் பணம் தங்கத்தின் மீதான சேமிப்பில் உள்ளது. மொத்தமாக 950 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இவர்களிடம் உள்ளன.தங்கம் அதிகம் பயன்படுத்துபவர்களின் மையமாக இந்தியா முதலிடத்தில் உள்ளது, அதனருகே சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை உலகிற்கு எடுத்துரைப்பதில் தங்கம் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இங்கு அதிக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்களை பணக்காரர்களாக உணருகிறார்கள். கடினமான கஷ்டகாலத்தில் கூட இவர்கள் தங்கத்தினை இழக்க மறுப்பதே இதன் மதிப்பிற்குக் காரணம். அதனால்தான் இவை இன்றளவும் இந்திய பணத்தின் மீதான உலகப்பார்வையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது.

Comments