பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;அதற்காக பள்ளிகளில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும். அக்., 17 முதல், 26 வரை, பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்; இறுதியில், மாநில போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments